AFCA - இனது சேவை பற்றிய முறைப்பாடுகளை சுயாதீன மதிப்பீட்டாளர் மீளாய்வு செய்வதுடன், AFCA-இனது உள்ளார்ந்த் முறைப்பாடுகளுக்கான நடைமுறையிலிருந்து விலகிச் சுயாதீனமாகப் பணியாற்றுகிறார். தகுதிகள் அல்லது ஒரு நிதிசார் நிறுவனத்தின் முறைப்பாடு குறித்த AFCA-இன் முடிவு குறித்த விடயப்பொருளை மீளாய்வுசெய்வதற்கான அதிகாரத்தை சுயாதீன மதிப்பீட்டாளர் கொண்டிருக்கவில்லை.
AFCA - இனது சேவை பற்றிய ஒரு முறைப்பாட்டினைச் சுயாதீன மதிப்பீட்டாளர் மீளாய்வுக்குட்படுத்தி, மதிப்பிட்டதும், அவருடைய முடிவுகள் அல்லது சிபாரிசுகளுக்கு எதிராக மேன்முறையீடுசெய்வதற்குச் சாத்தியம் இல்லை.
சுயாதீன மதிப்பீட்டாளர் என்பவர் யார்?
சுயாதீன மதிப்பீட்டாளர் என்பவர் AFCA சபையால் நியமிக்கப்படுகிறார் அத்துடன், அவர் சபைக்கு அறிவிப்பதுடன், சுயாதீன மதிப்பீட்டாளருக்கென வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடமையாற்றுகிறார். சுயாதீன மதிப்பீட்டாளர் ஆனவர், AFCA இனது நாளாந்த நடவடிக்கைகளின் ஒர் அங்கமாக இருக்கமாட்டார் என்பதுடன் AFCA இனது முதுநிலை நிர்வாகம் அல்லது மூத்த குறைகேள் அதிகாரி (Ombudsman)க்குப் பதிலளிக்க வேண்டியதில்லை.
AFCA - இன் தற்போதய சுயாதீன மதிப்பீட்டாளராவார் மெலிஸ்ஸா டையர் (Melissa Dwyer) ஆவார். கட்டுப்பாடு, உள்ளார்ந்த கணக்காய்வு மற்றும் ஒருமைப்பாட்டுச் சீர்திருத்தம் போன்றவற்றில் சிறப்புத்தேர்ச்சியுடன் தனியார், அரச மற்றும் இலாப நோக்கமற்ற துறைகளில் உயர் நிலை நிறைவேற்று அதிகாரியாக 20 வருடங்களுக்கும் மேலான வேலை அனுபவம் Melissa வுக்கு உண்டு. அவர் விக்டோரிய கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் (Victorian Department of Education and Training) பிரதான கணக்காய்வு நிறைவேற்று அதிகாரியாகவும், Broad-based Anti-corruption Commission (IBAC) - ஆல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அதன் ஒருமைப்பாட்டுச் சீர்திருத்தத்தின் வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
சுயாதீன மதிப்பீட்டாளருக்கு யார் முறையிடலாம்?
நிதி நிறுவன முறைப்பாட்டை AFCA கையாளும் முறையால் நேரடியாகப் பாதிக்கப்படும் எந்தவொரு நபரோ அல்லது வணிகமோ பின்வருவன உட்பட சுயாதீன மதிப்பீட்டாளருக்கு முறையிடலாம்:
- முறைப்பாட்டாளர்கள்
- நிதி நிறுவனங்கள்
- பிரதிநிதிகள்
- இணைந்த கட்சிக்காரர்கள்.
சுயாதீன மதிப்பீட்டாளர் மதிப்பிடக்கூடிய முறைப்பாடுகள்
AFCA-ஆல் வழங்கப்படும் தராதரமான சேவைகள் பற்றிய முறைப்பாடுகளை சுயாதீன மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்யலாம். ஒரு முறைப்பாட்டைக் கையாளுவதில் பின்வருவனபற்றிய முறைப்பாடுகள் எதனையும் உள்ளடக்கலாம்:
- தொழில் வல்லமை, தகைமை மற்றும் பணியாளரின் மனப்பான்மை.
- தகவல் பரிமாற்றம்
- நியாயம் மற்றும் பக்கம்சாராமை
- பொருத்தமான காலம்
- AFCA - இன் நடவடிக்கையைக் கடைப்பிடித்தல்.
சுயாதீன மதிப்பீட்டாளரால் ஆராயமுடியாத முறைப்பாடுகள்
பின்வருவன பற்றிய முறைப்பாடுகளை சுயாதீன மதிப்பீட்டாளர் ஆராயமுடியாது:
- நிதி நிறுவனத்தின் செயற்பாடுகள் அல்லது செயற்படாமை அல்லது முறைப்பாடு
- ஆரம்ப மதிப்பீடுகள், தீர்மானங்கள் மற்றும் நியாயாதிக்கத்திற்குட்பட்ட முடிவுகள் உள்ளடங்கலாக AFCA - இன் தீர்மானங்கள் அல்லது தீர்ப்புகள்
- AFCA - சார்ந்த பிரச்சினையைக் கையாளுவது பற்றி
- நிதி நிறுவனங்களிடமிருந்துஅறவிடப்படும் AFCA - இனது கட்டணம்.
AFCA - இன் முடிவு ஒன்றின் விளைவினைச் சுயாதீன மதிப்பீட்டாளர் மாற்றமுடியாது.
ஒரு நிதி நிறுவன முறைப்பாட்டின் மீதான AFCA-இன் தீர்மானம் அல்லது நியாயாதிக்கம் சார்ந்த முடிவு ஒன்றினை சுயாதீன மதிப்பீட்டாளரால் மாற்றவோ அல்லது இல்லாதொழிக்கவோ முடியாது. இது, நிதி நிறுவன முறைப்பாட்டின் நிகழ்வுகள் அல்லது தகைமைகள் மீதான முடிவு அல்லது தீர்ப்புக்கான மேன்முறையீடோ அல்லது பொறிமுறையோ அல்ல.
சுயாதீன மதிப்பீட்டாளரால் வழங்கப்படக்கூடிய பதில்கள்
உங்களுடைய முறைப்பாட்டைக் கையாளுவதில் AFCA தனது சேவை தராதரங்களைப் பூர்த்திசெய்யவில்லையென சுயாதீன மதிப்பீட்டாளர் கண்டறிந்தால், AFCA இனது பின்வரும் பிரதான குறைகேள் அதிகாரி போன்றோருக்கு அவர்கள் சிபாரிசு செய்யக்கூடும்:
- தரம் குறைந்த சேவைக்காக AFCA வருத்தம் தெரிவிக்கிறது
- தரமற்ற சேவையால் ஏற்படும் ஏதேனும் துன்பம் அல்லது வசதியீனம் போன்றவற்றிற்காக நிதிசாரா ஒரு தொகை நட்டவீட்டை AFCA செலுத்தும்
- சேவைக் குறைபாட்டைச் சீராக்குவதற்கு வேறு சில நடவடிக்கைகளை AFCA மேற்கொள்ளும்.
சுயாதீன மதிப்பீடாளருக்கு ஒரு முறைப்பாட்டினை எப்போது நீங்கள் தாக்கல் செய்யலாம்?
ஒரு சேவை முறைப்பாட்டை சுயாதீன மதிப்பீட்டாளர் ஆராய்வதற்கு முன்னர், பின்வருவன முக்கியமாகப் பொருத்தமாக இருக்கவேண்டும்:
- உங்களுடன் தொடர்புடைய நிதி நிறுவன முறைப்பாடு முடிவுசெய்யப்பட்டுள்ளது (அசாதாரண சந்தர்ப்பங்கள் பொருந்தாதுவிட்டால்)
- உங்களின் கவலைகளைப் போக்குவதற்கான சந்தர்ப்பம் ஒன்று AFCA - க்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும் (அதாவது, நீங்கள் முதலில் உங்களுடைய முறைப்பாட்டை AFCA க்குச் சமர்ப்பித்து ஒரு பதிலைப் பெற்றிருக்கவேண்டும்)
- AFCA - இனது சேவை முறைப்பாட்டுக்கான பதிலை நீங்கள் கிடைக்கப்பெற்றது மூன்று மாதங்களிலும் குறைவாக இருக்கவேண்டும்.